பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் பிடாரிகுளம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் மிர்சாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் விவசாய பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட செயலாளர் சத்யா மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளிடம் காங்கிரசார் கையெழுத்து பெற்றனர்.
கையெழுத்து
இதேபோல் கும்பகோணம் வட்டார காங்கிரஸ் சார்பில் செட்டிமண்டபம் பெட்ரோல் பங்க் அருகே வட்டார தலைவர் சசிகுமார் தலைமையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் நகர துணைத்தலைவர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட மீனவரணி தலைவர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு
விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் சார்பில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலிண்டர், ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடிய ஸ்டான் சாமி சிறைக்காவலில் இருந்தபோது மரணம் அடைந்தது குறித்து உரிய நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story