பர்னிச்சர் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


பர்னிச்சர் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2021 1:35 AM IST (Updated: 9 July 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் பர்னிச்சர் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் ஷாஜி (வயது 56) என்பவர் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென பர்னிச்சர் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் ஷாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த ஷாஜி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story