குன்னம் பகுதியில் ஆலங்கட்டி மழை


குன்னம் பகுதியில் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 9 July 2021 1:47 AM IST (Updated: 9 July 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மாலையில் வயலூர், வயலப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இதில் ஆலங்கட்டிகள் விழுந்தன. இதனை கண்ட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து மழையில் நனைந்த படி வானில் இருந்து விழுந்த ஆலங்கட்டிகளை தங்களது கைகளில் எடுத்தும், பாத்திரங்களில் பிடித்தும் அதிசயமாக பார்த்ததோடு, அவரவர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.

Next Story