8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது


8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 9 July 2021 1:47 AM IST (Updated: 9 July 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் டேவிட் என்ற செந்தமிழ்ச்செல்வன். கூலித்தொழிலாளியான இவர், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா விசாரணை நடத்தினார். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வனை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story