கருப்பு பூஞ்சை நோய்க்கு 11 வயது சிறுவன் சாவு


கருப்பு பூஞ்சை நோய்க்கு 11 வயது சிறுவன் சாவு
x
தினத்தந்தி 9 July 2021 2:40 AM IST (Updated: 9 July 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை நோய்க்கு 11 வயது சிறுவன் பலியானான்.

பெங்களூரு:சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேயை சேர்ந்தவன் 11 வயது சிறுவன். இந்த சிறுவன் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தான். பின்னர் கொரோனாவில் இருந்து சிறுவன் மீண்டு இருந்தான். இந்த நிலையில் சிறுவன் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

இதனால் அந்த சிறுவன் சிகிச்சைக்காக பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கடந்த மே மாதம் 25-ந் தேதி அந்த சிறுவன் மேல்சிகிச்சைக்காக சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டான். இந்த நிலையில் கருப்பு பூஞ்சையால் சிறுவன் வலது கண் பார்வை இழந்து இருந்தான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சிறுவன் இறந்து விட்டான். கண் பார்வை இழந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். கருப்பு பூஞ்சைக்கு மாநிலத்திலேயே இளம் வயதில் இறந்தது இந்த சிறுவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story