ஆன்லைன் வேலை பெற முயன்று ரூ.11 லட்சத்தை பறிகொடுத்த இளம்பெண்
ஆன்லைனில் வேலை பெற முயன்று பெண் ஒருவர் ரூ.11 லட்சத்தை இழந்தார்.
பெங்களூரு: பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அஸ்வினி (வயது 28 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை செய்ய விரும்பினார். இதற்காக இணையதளத்தில் அவர் வேலை தேடி கொண்டு இருந்தார்.
அப்போது இணையதளத்தில் ஆன்லைன் வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பரம் இருந்தது. பின்னர் அந்த நிறுவன எண்ணை தொடர்பு கொண்டு அஸ்வினி பேசினார். பின்னர் அஸ்வினியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அந்த குறுந்தகவலில் வந்த லிங்க்கை கிளிக் செய்து அதன்மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. இதனால் அஸ்வினி அந்த லிங்க்கை கிளிக் செய்து தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். மேலும் அதில் கூறப்பட்டு இருந்த வேலைக்கான கட்டணத்தையும் அவர் செலுத்தினார். சிறிது நேரத்தில் அஸ்வினியின் செல்போன் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றனார். ஆனால் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் தன்னிடம் ரூ.11 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்ததை அஸ்வினி உணர்ந்தார். இதுகுறித்து அவர் தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story