சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்-டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவு


சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்-டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2021 3:36 AM IST (Updated: 9 July 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:
சேலம் சரகத்தில்  8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
பணி இடமாற்றம்
சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்து சரக ேபாலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த லட்சுமணதாஸ், தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தங்கவேல், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், தர்மபுரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். 
குற்ற தடுப்பு பிரிவு
சேலம் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தேவராஜ், சேலம் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story