சேலத்தில் டாக்டர் காரில் பணம், செல்போன் திருட்டு-3 பேர் கைது


சேலத்தில் டாக்டர் காரில் பணம், செல்போன் திருட்டு-3 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 3:53 AM IST (Updated: 9 July 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டாக்டர் காரில் வைத்திருந்த பணம், செல்போனை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் டாக்டர் காரில் வைத்திருந்த பணம், செல்போனை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம், செல்போன் திருட்டு
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அரியானூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தனது காரில் ராமகிருஷ்ணா ரோடு பகுதிக்கு வந்தார். பின்னர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு வந்த போது காரின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காரின் உள்ளே பார்த்த போது, ரூ.20 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். 
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் கார் கதவை திறந்து பணம், செல்போனை திருடுவது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக போலீசார், வீராணத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 42), அம்மாபேட்டையை சேர்ந்த அம்பேத்கர் (35), சின்னதிருப்பதியை சேர்ந்த பிரபாகரன் (36) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 3 பேரும் டாக்டர் காரில் வைத்திருந்த பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story