கல் குவாரியில் வேலை பார்த்த கொத்தனார் திடீர் சாவு


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 9 July 2021 5:04 AM IST (Updated: 9 July 2021 5:04 AM IST)
t-max-icont-min-icon

கல் குவாரியில் வேலை பார்த்த கொத்தனார் திடீர் உயிரிழந்தார்.

கீரனூர்
கீரனூர் அருகே மூட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை என்ற ஊரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 60) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால், அவரை வேலைக்கு அழைப்பதற்காக செல்வராஜ் தங்கியிருந்த அறைக்கு கல்குவாரியை சேர்ந்தவர்கள் சென்றனர். அப்போது அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். 
அதன்பேரில், அவரை ஆஸ்பத்திரி கொண்டு செல்வதற்காக ஆட்டோவை அழைக்க சென்றிருந்த நேரத்தில் செல்வராஜ் திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து, கல்குவாரி மேலாளர் கார்த்திகேயன் உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story