மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 10:45 AM IST (Updated: 9 July 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெரம்பூர்,

பா.ஜ.க. அரசின் பொய் வழக்கால் சிறையில் அடைக்கப்பட்டு மரணம் அடைந்த ஸ்டான் சுவாமின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பகுதி செயலாளர் கல்தூண் ரவி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தமிழினியன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட இருகட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story