தினசரி கொரோனா பாதிப்பு 13-ஆக குறைந்தது


தினசரி கொரோனா பாதிப்பு 13ஆக குறைந்தது
x
தினசரி கொரோனா பாதிப்பு 13ஆக குறைந்தது
தினத்தந்தி 9 July 2021 8:30 PM IST (Updated: 9 July 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

தினசரி கொரோனா பாதிப்பு 13ஆக குறைந்தது

பொள்ளாச்சி


பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை பகுதிகளில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 300-யை கடந்தது.

 இதேபோன்று உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கொரோனா 2-வது அலையில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில் கடந்த மாதம் முதல் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் அதிகமாக காணப்பட்ட தொற்று எண்ணிக்கையும் குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி பகுதியில் சராசரியாக 25 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பொள்ளாச்சி பகுதியில் 13-ஆக குறைந்தது. 

பொள்ளாச்சி நகரில் ஒருவருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 2 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 3 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 5 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நேற்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

 இருப்பினும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story