குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிரம்


குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை  போலீசார் தீவிரம்
x
குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிரம்
தினத்தந்தி 9 July 2021 8:47 PM IST (Updated: 9 July 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிரம்

சுல்தான்பேட்டை, 


சுல்தான் பேட்டை ஒன்றியம் பூராண்டாம் பாளையத்தைச்சேர்ந்தவர் பரமேஸ்வரி. கோழிப்பண்ணை கூலித்தொழிலாளி. இவரும், இவரது மகளும் கடந்த 3-ந்தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். 


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த பீரோவை நெம்பிஅதில் இருந்த 18 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.22ஆயிரத்தை திருடி சென்றனர்.


இதுகுறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், நகை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை கண்டுபிடித்து கைது செய்ய கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், பாண்டியராஜன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த தனிப்படை  போலீசார் கோவை, பல்லடம், பொள்ளாச்சி,தாராபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் மர்ம நபர்களை வலைவீசித் தொடர்ந்து தேடி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என தனிப்படை போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story