தந்தையை கத்தியால் குத்திய மகன் மீது வழக்கு


தந்தையை கத்தியால் குத்திய மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 July 2021 9:18 PM IST (Updated: 9 July 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

தந்தையை கத்தியால் குத்திய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்.
ராமநாதபுரம் சின்னக்கடை லெப்பை தெருவை சேர்ந்தவர் ் தியாகராஜன் (வயது61). இவரின் மகன் கார்த்திக் என்பவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் மகனிடம் செலவிற்கு பணம் கொடு என்று கேட்டுள்ளார். 
சென்னையில் இருந்து வந்ததும் பணம் கேட்பதாக ஆத்திரமடைந்து வீட்டில் கிடந்த கத்தியால் தலை மற்றும் காலில் தந்தை என்றும் பாராமல் குத்தினாராம். 
இதில் படுகாய மடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Next Story