தினமும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை


தினமும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 July 2021 10:30 PM IST (Updated: 9 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தினமும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்து உள்ளது. தினமும் 2,700 பேருக்கும் மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்படி பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு நடமாடும் சுகாதார குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை போலீசார் கண்டறிந்து பரிசோதனை செய்ய வைத்தனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தினமும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிலர் தாமாகவே முன்வந்து பொது இடங்களில் பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story