குடியிருப்பு பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம்
ஊட்டியில் குடியிருப்பு பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள எச்.பி.எப். குடியிருப்பு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் மித வெப்பமான பகுதிகளில் மட்டுமே வாழும் செந்நாய்கள் குளிர்ந்த காலநிலை நிலவும் எச்.பி.எப். பகுதியில் புகுந்து உள்ளன.
இவை குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். இதேபோல் ஊட்டி லவ்டேல் சந்திப்பு பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காணப்படுகிறது. முதுமலை வனப்பகுதியில் வாழும் செந்நாய்கள் காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்து ஊட்டியில் புகுந்து உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மார்லிமந்து அணையில் தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை செந்நாய்கள் கூட்டம் கொன்று தின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புகுந்த செந்நாய்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story