தேசிய மக்கள் நீதிமன்றம்


தேசிய மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 9 July 2021 10:34 PM IST (Updated: 9 July 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

தேனி: 

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட செசன்சு நீதிபதியுமான விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்படும். இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக் கடன், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப வன்முறை, காசோலை, நுகர்வோர், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 


இதன்மூலம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story