கொரோனா பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்தது


கொரோனா பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 9 July 2021 10:40 PM IST (Updated: 9 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 42,951 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 334 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 42,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,013 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,135 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 544 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story