கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை, ஜூலை.10-
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது26). இவர் போஸ் நகர் பகுதியில் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விக்னேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் அவரிடம் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Tags :
Next Story