உயர் மின்அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
உயர் மின்அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ளது கோடங்குடி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை 6 மணியளவில் இந்த பகுதியில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் இருந்த டி.வி., மின்விசிறி, பிரிட்ஜ், வாசிங்மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேதமான பொருட்களை சாலையில் போட்டு, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அ ப்போது சேதமான பொருட்களுக்கு மின்வாரியத்தினர் உரிய இழப்பீடு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story