பழ மரங்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகள் மோதல்
பழ மரங்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்டது.
ஊட்டி,
குன்னூர் அருகே காட்டேரி, பர்லியார் ஆகிய தோட்டக்கலை பண்ணைகளில் மங்குஸ்தான், துரியன் உள்ளிட்ட பழ மரங்கள் உள்ளன. இதில் விளையும் பழங்களை அறுவடை செய்ய ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
அதன்படி தோட்டக்கலை அதிகாரிகள் முன்னிலையில் 2 பண்ணைகளில் பழ மரங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் தலையீடு இல்லாமல் ஒரு தரப்பினர் மட்டுமே ஏலத்தை முடிவு செய்ததாக தெரிகிறது. இதனால் மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது முற்றவே வியாபாரிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் மோதிக்கொண்டதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டனர். பின்னர் ஏலம் நடந்தது. தோட்டக்கலை அதிகாரியிடம் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தரப்பினருக்கு சாதகமாக டெண்டர் விடப்படுவதாக மற்றொரு தரப்பினர் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story