கோவைக்கு வரும் வெளிநாட்டவர்கள் குறித்து தகவல்பெற முடியாமல் போலீசார் தவிப்பு
வருகை பதிவு முறை ரத்து காரணமாக கோவைக்கு வரும் வெளிநாட்ட வர்கள் குறித்து தகவல் பெற முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மண்டல பதிவு அலுவலகத்துக்கு கடிதமும் எழுதப்பட்டு உள்ளது.
கோவை
வருகை பதிவு முறை ரத்து காரணமாக கோவைக்கு வரும் வெளிநாட்ட வர்கள் குறித்து தகவல் பெற முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மண்டல பதிவு அலுவலகத்துக்கு கடிதமும் எழுதப்பட்டு உள்ளது.
வெளிநாட்டவர்கள்
கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதுதவிர ஆயுர்வேத சிகிச்சை மையங்களும் உள்ளன. இதன் காரணமாக கோவைக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பலர் வந்து செல்கிறார்கள்.
இவ்வாறு வருபவர்கள் போலீசில் தாங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறோம், விசா காலம், கோவையில் எந்தெந்த இடங் களுக்கு செல்கிறோம், யாரை சந்திக்க உள்ளோம், எப்போது ஊருக்கு திரும்பி செல்கின்றோம் என்ற விபரங்களை தெரியப் படுத்த வேண்டும்.
போலீசார் கடிதம்
தற்போது மத்திய அரசு இந்த விபரங்களை போலீசில் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவித்து விட்டது. இதன் காரணமாக கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் வெளிநாடுகளை சேர்ந்த நபர்கள் யார் வருகிறாறர்கள்,
அவர்களின் விபரங்கள் மாவட்ட போலீசாருக்கு தெரியாத நிலை உள்ளது.
இதையடுத்து கோவை வரும் வெளிநாட்டவர்களின் விவரங்களை தரும்படி வெளிநாட்டவர்கள் மண்டல பதிவு அலுவலகத்திற்கு கோவை மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் அதிகாரி கூறியதாவது:-
கண்காணிப்பு
கோவை வரும் வெளிநாட்டவர்கள் மாநகர் பகுதி என்றால் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்திலும், மாவட்டம் என்றால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திலும் தங்களது வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்.
இதன்மூலம் விசா காலம் முடிந்து தங்கியுள்ளவர்கள் விபரங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
இந்த நிலையில் மத்திய அரசு இதுபோன்ற பதிவுகள் இனி தேவையில்லை என்று ரத்து செய்ததால் கோவை வரும் வெளிநாட்டவர்களின் விபரங்களை சேகரிக்க முடியாத நிலை உள்ளது.
வருகை பதிவு
கோவையில் சமீபத்தில் ஒரு வங்கதேச பெண் சட்டவிரோதமாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நைஜிரிய வாலிபர் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
எனவே இது போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கோவை வரும் வெளிநாட்டவர்களின் விபரங்களை உடனுக்குடன் தரும்படி வெளிநாட்டவர்கள் வருகை பதிவு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story