முகநூலில் இளம்பெண் குறித்து அவதூறு; வாலிபர் கைது


முகநூலில் இளம்பெண் குறித்து அவதூறு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 11:35 PM IST (Updated: 9 July 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

முகநூலில் இளம்பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

காரைக்குடியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னைப்பற்றி யாரோ ஒருவர் தவறாக முகநூல் மற்றும் வெளியிடங்களில் தகவல் வெளியிடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனு பிரியா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண்ணின் உறவினரான கார்த்தி (20) என்பவர் இதுபோல் செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story