வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 31 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியானது.
ேமலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 218 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதால் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 90 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் 1,246 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 547 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48 ஆயிரத்து 683 பேர் குணமடைந்து உள்ளனர். 618 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story