பொன்மலையில் தயாராகி வரும் மலை ரெயில் என்ஜின்கள்
திருச்சி பொன்மலை பணிமனையில் தயாராகி வரும் மலை ரெயில் என்ஜின்கள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன.
பொன்மலையில் தயாராகி வரும் மலை ரெயில் என்ஜின்கள்
திருச்சி,
திருச்சி பொன்மலை பணிமனையில் தயாராகி வரும் மலை ரெயில் என்ஜின்கள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன.
மலை ரெயில்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலானது கடந்த 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. இந்த ரெயிலானது சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது.
ஊட்டியின் இயற்கை எழிலையும், வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் மலைரெயிலில் பயணிக்கும்போது கண்டு ரசிக்க முடியும். இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நீராவி என்ஜின்கள்
இந்தநிலையில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பில் coal fired எனப்படும் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜினும், ரூ.9 கோடியே 80 லட்சம் மதிப்பில் பர்னஸ் ஆயில் மூலம் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜினும் பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டு சுமார் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் என்ஜின்களின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக பொன்மலை பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் தற்போதைய காலசூழலுக்கு ஏற்பவும், இந்த மலைரெயில் என்ஜின்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 10 முதல் 11 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்படுகிறது.
3,600 பாகங்கள்
இந்த மலை ரெயில் என்ஜின்களில் 3,600 பாகங்கள் உள்ளன. இவற்றில் 1,400 பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையிலும், மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தில் கோவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாங்கி வரப்பட்டு முற்றிலும் இந்திய தயாரிப்பாக மலை ரெயில் உருவாக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 4 நீராவி என்ஜின்கள் பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டு பர்னஸ் ஆயில் மூலம் எரிக்கப்பட்டு நீராவியால் இயக்கப்படுகிறது. இந்த முறை ரெயில்கள் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் ஈடு இணை கூற முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story