மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை + "||" + warning

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 பேர் கைது 
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா மற்றும் கள்ள சாராய விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (8-ந் தேதி) தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூ.7 ஆயிரத்து 740 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
கடும் நடவடிக்கை 
மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 18 பேர் மீது தமிழ்நாடு லாட்டரி சீட்டுகள் தடை சட்டத்தின் கீழ், ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்...? உளவு துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த கூடும் என உளவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. சென்னையில் உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
சென்னையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
3. சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்-கலெக்டர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
டெல்லியில் பெய்து வரும் மழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. தோஷம் கழிக்கவும் பாலீஷ் போடவும் வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
தோஷம் கழிப்பதாகவும் பாலீஷ் போட்டு தருவதாகவும் கூறி வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்