ஆனைக்கட்டியில் காட்டுயானையால் போக்குவரத்து பாதிப்பு
ஆனைக்கட்டியில் காட்டுயானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துடியலூர்
ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார கிராமங்களில் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி அருகில் உள்ள செங்கல் சூளைக்கு காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தது. இதை கண்ட தெருநாய்கள் குரைத்தன.
உடனே யானை மிரண்டு ஆனைக்கட்டி சாலைக்கு வந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு காட்டுயானை மலைப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story