மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலா ரூ.1000 வழங்கும் ஆசிரியர்கள்


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலா ரூ.1000 வழங்கும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 10 July 2021 4:17 AM IST (Updated: 10 July 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலா ரூ.1000 வழங்கும் ஆசிரியர்கள்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன்படி குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக(தலா ரூ.1000) ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை வழங்குகிறார்கள். 

அங்கு பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 பேர் சேர்ந்து உள்ளனர். இதேபோன்று குன்னூரில் உள்ள பாலகிளாவா நகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பிரேமா வரவேற்றார். 

குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் கலந்துகொண்டு புதிதாக 4-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர் அபினேஷ், 2-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர் பிரிதிஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் கூறியதாவது:-

குன்னூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிதாக சேருகிறவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், தமிழ் வழிக்கல்வியில் பாடங்கள் நடத்தப்படுவதுடன் யோகா, கராத்தே போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படித்து மாணவர்கள் பயன்பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story