ஆத்தூர் அருகே குட்டையில் மூழ்கி மாணவன் சாவு- நீச்சல் தெரியாததால் பரிதாபம்


ஆத்தூர் அருகே குட்டையில் மூழ்கி மாணவன் சாவு- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 10 July 2021 4:41 AM IST (Updated: 10 July 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே நீச்சல் தெரியாததால் குட்டையில் மூழ்கி மாணவன் பலியானான்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே நீச்சல் தெரியாததால் குட்டையில் மூழ்கி மாணவன் பலியானான்.
மாணவன்
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட கல்உடைத்தான்மலை பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவரது பேரன் பாலா (வயது 13). அந்த பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பாலாவின் பெற்றோர் இறந்து விட்டதால் அவன், தனது தாத்தா சேகர் பராமரிப்பில் இருந்து வந்தான். 
இந்தநிலையில் நேற்று அவன் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு குட்டைக்கு குளிக்க சென்றான். ஆத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குட்டையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதையறியாத பாலா தண்ணீரில் இறங்கி குளித்தான். குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற அவனால் பின்னர் கரைக்கு திரும்ப முடியவில்லை. மேலும், நீச்சலும் தெரியாத காரணத்தால் அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
போலீசார் விசாரணை
அக்கம், பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கி பலியான மாணவன் பாலாவின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும், மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story