80 வயதான தாயை பராமரிக்காத மகன் மீது போலீசார் வழக்கு


80 வயதான தாயை பராமரிக்காத மகன் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 10 July 2021 8:39 AM IST (Updated: 10 July 2021 8:39 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கோமளா பாய் (வயது 80). தற்போது இவர், வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோமளா பாய் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். எனது கணவர் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது உடல்நல குறைவால் உயிரிழந்தார். அந்த வேலை எனது மகன் கமலக்கண்ணனுக்கு வழங்கப்பட்டது.அதன்பிறகு எனது சொந்த வீட்டை விற்று மகன் மற்றும் மகள்கள் என 3 பேருக்கும் சரிசமமாய் பிரித்து கொடுத்தேன். பின்னர் சவுகார்பேட்டையில் ரூ.10 ஆயிரம் 
சம்பளத்தில் வேலை செய்து வந்தேன். நடிகை கே.ஆர்.விஜயா, ஐசரி கணேசன், ராதிகா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளிலும் வேலை செய்து அந்த பணத்தையும் மகனிடம் கொடுத்தேன். ஆனால் தற்போது எனது மகன், எனக்கு மாத செலவுக்கு ரூ.3 ஆயிரம் மட்டும் கொடுத்து வருகிறான். ரூ.5 ஆயிரம் கேட்டால் பணமில்லை என்று கூறி கணவர் பெயரில் வரும் பென்சன் பணத்தையும் என்னிடம் வழங்குவது இல்லை.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி கமிஷனர் உத்தரவின்பேரில் வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் தாயை பார்த்து கொள்ள அவரது 3 பிள்ளைகளும் தயாராக இருந்தாலும், கோமளாபாய்தான் அவர்களுடன் செல்ல மறுப்பதாக கூறப்படுகிறது. எனினும் தாயை பராமரிக்காததால் கமலக்கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story