செட்டிபுலத்தில் மணல் கடத்தல்; டிராக்டர் பறிமுதல் - தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு


செட்டிபுலத்தில் மணல் கடத்தல்; டிராக்டர் பறிமுதல் - தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2021 3:38 PM IST (Updated: 10 July 2021 3:38 PM IST)
t-max-icont-min-icon

செட்டிபுலத்தில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகா செட்டிபுலத்தில் மணல் கடத்தி செல்லப்படுவதாக கரியாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி கைகாட்டினர். ஆனால் டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

பின்னர் டிராக்டரில் சோதனை செய்த போது அதில் மணல் இருந்தது போலீசார் விசாரணையில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மற்றும் டிராக்டர் உரிமையாளரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story