டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேர் கைது


டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2021 9:36 PM IST (Updated: 10 July 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு
கயத்தாறு தாலுகா ஆத்திகுளம் கிராமம் அருகே உள்ள உப்போடை பகுதியில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோமாக டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். 
விசாரணையில், ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 32), கார்த்திக் (20) மற்றும் 16 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இசக்கிபாண்டி, கார்த்திக் ஆகிய இருவரும் கோவில்பட்டி சிறையிலும், மற்றொருவர் காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர். மேலும் மணல் அள்ளிய டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story