மீனவரை கொலை செய்த வாலிபர் கைது


மீனவரை கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 July 2021 9:41 PM IST (Updated: 10 July 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

மீனவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே நரிப்பையூர் பூசாரி தெருவை சேர்ந்த மீனவர் முருகன் (வயது45). இவர் நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களாக சாயல்குடி போலீசார் முருகனுடன் மது அருந்தியவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் பார்த்திபன் (35) கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மீனவர் முருகன், பார்த்திபன் ஆகிய 2 பேரும் மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தூங்கிய பிறகு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மதுபோதையில் இருந்த முருகனை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் பார்த்திபன் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தார்.

Next Story