மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை கண்டித்து 8 மாவட்டங்களில் போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை கண்டித்து 8 மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை:-
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை கண்டித்து 8 மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து வருகிற 17-ந் தேதி திருச்சி, தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் போராட்டம் நடத்துவது.
சாலை பணி நடைபெற கூடாது
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும். விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட பட்டா மற்றும் குத்தகை சாகுபடி நன்செய், புன்செய் மற்றும் கோவில் நிலத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு இன்றைய சந்தை விலை மதிப்பீட்டின்படி உரிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் சாலை விரிவாக்க பணி நடைபெறக்கூடாது.
மயிலாடுதுறை தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story