தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவி சிறுவன் உள்பட 5 பேர் தற்கொலை


தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவி சிறுவன் உள்பட 5 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 July 2021 9:46 PM IST (Updated: 10 July 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, சிறுவன் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, சிறுவன் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன். இவருடைய மகள் தென்றல் (வயது 18). இவர் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் தென்றல் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போனை அடிக்கடி பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காக்கில் சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
உத்தமபாளையத்தை அடுத்த அணைப்பட்டியை சேர்ந்தவர் சுருளிராஜ் (46). டிராக்டர் டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் விரக்தியடைந்த சுருளிராஜ் நேற்று முன்தினம் ராயப்பன்பட்டி வரட்டாறு ஓடையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் தற்கொலை
இதேபோல் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் தினேஷ் (16). இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 
தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (58) என்பவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story