உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்துபோனார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 9), மகள் புகழினி (7). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள தங்களது தாத்தா வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டின் மாடியில் நின்று 2 பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது மாடி வழியாக சென்ற மின்கம்பியை கமலக்கண்ணன் தொட்டுள்ளான். இதில் அவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த புகழினி, தனது தாத்தாவிடம் இதுகுறித்து தெரிவித்தாள். உடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கமலக்கண்ணனை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலக்கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story