மக்கள் நீதிமய்யம் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக வாபஸ்பெறக்கோரியும் மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் பிரைட் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தெற்கு தேவராஜ், கிழக்கு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் சேகர் கண்டன உரையாற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் பிரியா பெரியகருப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெய்கணேஷ், இளைஞரணி செயலாளர் நிவாஸ்சங்கர், நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் மதிகிருஷ்ணன், ராமேசுவரம் மகளிரணி நகர் செயலாளர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் நூதன முறையில் விறகு அடுப்பில் சமைத்தும் காரில் கயிறு கட்டி இழுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story