அடிக்கடி மின்தடை


அடிக்கடி மின்தடை
x
தினத்தந்தி 10 July 2021 10:04 PM IST (Updated: 10 July 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

கீழக்கரை, 
கீழக்கரை துணை மின் நிலையத்தில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக இணைப்புகளும் உள்ளன. மேலும் இந்தபகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. கீழக்கரையை சுற்றி சின்ன மாயாகுளம், பெரிய மாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகர், அளவாய் கரைவாடி, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம், முள்ளுவாடி, மாவிலாதோப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.  கீழக்கரை துணைமின் நிலையத்தில் 9-க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் உள்ளனர். இதில் சில பணியாளர்கள் 5வருடத்திற்கும் மேலாக தற்காலிக பணி யாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எந்த மின் பணியாளர் எந்த பகுதிக்கு செயல்படுகிறார் என்ற விவரங்கள் முறையாக யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story