தொடர் மழையால் பூட்டை ஏரி நிரம்பியது
தொடர் மழையால் பூட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
சங்கராபுரம்
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அந்த வகையில் சங்கராபுரம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. இந்த மழைநீர் எட்டி ஆறு வழியாக அரசம்பட்டு மணி நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மணி நதியிலிருந்து பாசனம் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வறண்டு கிடந்த ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து காணப்படுகிறது. அந்த வகையில் சங்கராபுரம் அடுத்துள்ள பூட்டையில் உள்ள ஏரிக்கும் தண்ணீர் வந்தது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் ஏரி நிரம்பி வழிகிறது. இதன் மூலம் செம்பராம்பட்டு, பொய்க்குணம், நெடுமானூர், தியாகராஜபுரம் ஏரிகளுக்கும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
பூட்டை ஏரி நிரம்பி வழிவதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story