68 போலீசார் ரத்த தானம்


68 போலீசார் ரத்த தானம்
x
தினத்தந்தி 10 July 2021 10:57 PM IST (Updated: 10 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 68 போலீசார் ரத்த தானம் செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் 68 போலீசார் மற்றும் 6 தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த சிறப்பு முகாமின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு 75 யூனிட் ரத்தம் கிடைத்தது. நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, உதவி மருத்துவ அலுவலர்கள் மிதுன்குமார், செந்தில், வித்யாஸ்ரீ, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன், வெற்றிச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின், பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story