பரங்கிப்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கிளீனர் உடல் நசுங்கி சாவு
பரங்கிப்பேட்டை அருகே லாரிக்கு அடியில் தூங்கிய கிளீனர், லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
பரங்கிப்பேட்டை,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசப்பன் மகன் ராஜேஷ்குமார்(வயது 33). லாரி டிரைவர். இவருடைய லாரியில் அதே பகுதியை சேர்ந்த உறவினா் அய்யம்பெருமாள்(40) கிளீனராக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்குமாரும்,
அய்யம்பெருமாளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை பகுதிக்கு விற்பனை செய்வதற்காக வந்தனர்.
லாரியின் அடியில்...
பின்னர் அங்கு எம்.சாண்டை விற்பனை செய்த அவர்கள், பரங்கிப்பேட்டை அருகே உள்ள முட்லூர் மெயின் ரோட்டில் லாரியை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த நடராஜன்(47) என்பவரும், தனது லாரியில் அங்கு வந்தார்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து அய்யம்பெருமாள்நடராஜன் லாரியின் கீழ் பகுதியில் ஒதுங்குவதற்காக சென்றார். பின்னர் அவர் அங்கேயே படுத்து தூங்கியதாக தொிகிறது.
கிளீனர் சாவு
இதையடுத்து மழை நின்றதும், தனது லாரியை ஓட்டிச்செல்வதற்காக நடராஜன் வந்தார். அப்போது அய்யம்பெருமாள் லாரியின் கீழே படுத்திருந்ததை பார்க்காத அவர் லாரியை இயக்கினார். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி அய்யம்பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யம்பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story