கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு வந்தது காவிரி நீர் கடைமடை பகுதியில் விவசாய பணிகள் மும்முரம்
கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் கடைமடை பகுதியில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில்,
காவிரி டெல்டாவில் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இதுதவிர சென்னை மக்களின் குடிநீர்தேவையை தீர்ப்பதில் வீராணத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
ஏரிக்கு முக்கிய நீர் ஆதரமாக இருப்பது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர்-தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழணை ஆகும். 9 அடி கொள்ளளவு கொண்ட இந்த கீழணையில் 7 அடியில் நீர்மட்டம் இருக்கும் போது, வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
500 கனஅடி தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கல்லணையை கடந்து, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடைமடை பகுதியாக இருக்கும் கீழணைக்கு கடந்த 16-ந்தேதி வந்தடைந்தது.
Related Tags :
Next Story