கள்ளக்குறிச்சியில் முககவசம் ஹெல்மெட் அணிந்து வந்த 200 பேருக்கு மரக்கன்று


கள்ளக்குறிச்சியில்  முககவசம் ஹெல்மெட் அணிந்து வந்த 200 பேருக்கு மரக்கன்று
x
தினத்தந்தி 10 July 2021 11:04 PM IST (Updated: 10 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் முககவசம், ஹெல்மெட் அணிந்து வந்த 200 பேருக்கு மரக்கன்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் காவல்துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 200 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார். 

பின்னர் அவர் பேசும்போது, இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லக்கூடாது, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசு, மணிகண்டன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story