சிதம்பரத்தில் 2 கடைகளில் திருட்டு வாலிபர் கைது
சிதம்பரத்தில் 2 கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம்,
சிதம்பரம் லால்கான் தெருவில் இனிப்பு கடை வைத்திருப்பவர் நிக்கல் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய கடையில் வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு சென்றார்.
தொடர்ந்து நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிக்கல் கடையில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.
இதேபோல், இவரது கடையின் அருகே மருந்து கடை வைத்துள்ள மனோகர் என்பவரது கடையிலும் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளுமேட்டுத்தெரு தெருவில் உள்ள துபேல்அகமது (44), என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தில்லை காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ராஜே ஷ்(35) என்பதும், மேற்கூறிய இடங்களில் அவர் திருடியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story