மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்


மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2021 12:42 AM IST (Updated: 11 July 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர்  நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது விறகு அடுப்பில் சமையல் செய்வது போல் அடுப்பு, விறகு, பானையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் டாக்டர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story