மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கலையரசன் (வயது 25). இவர் கீரைக்காரன் தட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள புளிய மரத்தில் இரும்பு கம்பியை வைத்து புளியம்பழம் பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகே உள்ள மின் ஒயர் மீது இரும்பு கம்பி பட்டு மின்சாரம் தாக்கி கலையரசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் கணேசன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story