நொய்யல் அருகே சாலையோரம் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்


நொய்யல் அருகே சாலையோரம் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 11 July 2021 1:20 AM IST (Updated: 11 July 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே சாலையோரம் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
கழிவுநீர்
நொய்யல் அருகே உள்ள கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோட்டில் சுந்தராம்பாள் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை உருவாக்கும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் செல்ல ஒரு குறிப்பிட்ட நீளம் மட்டும் கால்வாய் வெட்டப்பட்டது. 
அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் கால்வாயை நீல படுத்துவதாக கூறியுள்ளார். ஆனால் சாலை பணிகளை செய்து விட்டு சாக்கடை கால்வாய் பணியை அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. 
கோரிக்கை
மேலும், சாக்கடை நீரில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து கொண்டிருக்கிறது. மேலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடையில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் குறித்து நடவடிக்கை எடுத்து புகளூர் வாய்க்கால் வரை கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story