டைல்ஸ் கடையில் ரூ.5.17 லட்சம் கையாடல்; ஊழியர் கைது


டைல்ஸ் கடையில் ரூ.5.17 லட்சம் கையாடல்; ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 July 2021 2:23 AM IST (Updated: 11 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னராயப்பட்டணாவில் டைல்ஸ் கடையில் ரூ.5.17 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாசன்: சென்னராயப்பட்டணாவில் டைல்ஸ் கடையில் ரூ.5.17 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். 

டைல்ஸ் கடை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா டவுன் மாரனஹள்ளி சர்க்கிளில் மைசூரு சாலையில் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். 

சொந்த ஊரை சேர்ந்தவர் என்பதால் ராஜ் மீது ராஜேஷ்குமார் அதிகளவு நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் பண விவரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தையும் அவரிடம் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்குமார், கடையின் நிர்வாகத்தை ராஜிடம் ஒப்படைத்து விட்டு சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு சென்றிருந்தார். இதனால் ராஜ், கடை நிர்வாகத்தை கவனித்து வந்தார். 

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ்குமார், ராஜஸ்தானில் இருந்து ஹாசனுக்கு வந்தார். அப்போது கடையின் வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்தார். மேலும் கடையில் இருந்த டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்கள் பெருமளவு விற்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை விற்பனை செய்ததற்கான சரியான ஆவணங்களை ராஜ் கொடுக்கவில்லை. இதுகுறித்து ராஜிடம் கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

இதனால் கடையில் இருந்து ரூ.5.17 லட்சத்தை ராஜ் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ்குமார், சென்னராயப்பட்டணா புறநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story