தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,050 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,050 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 July 2021 2:25 AM IST (Updated: 11 July 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,050 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்:

அரியலூர், ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 150 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விசாரித்ததில், ஆயிரத்து 50 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.44 லட்சத்து 5 ஆயிரத்து 900-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கோகுல் முருகன் செய்திருந்தார்.

Next Story