கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து சாவு


கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 11 July 2021 2:43 AM IST (Updated: 11 July 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து இறந்தார்.

கோவை, 

கோவை போத்தனூர் நியூடவுன் இஸ்மாயில் வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 82). பால் வியாபாரி. இவரது மனைவி மரகதம் (77). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் வீட்டில் இருந்த அய்யாசாமி உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அப்போது அவருடைய உடலை பார்த்து மரகதம் கதறி அழுது துடித்தார். 

கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்த மரகதம் நேற்று மாலை 4.30 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் குறிச்சி பகுதியில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 சாவிலும் இணைபிரியாமல் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story