கோவையில் புதிதாக 338 பேருக்கு கொரோனா


கோவையில் புதிதாக 338 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 July 2021 2:43 AM IST (Updated: 11 July 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் புதிதாக 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோவை

கோவையில் புதிதாக 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நீலகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

338 பேருக்கு தொற்று

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 338 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 24 ஆயிரத்து 744-ஆக உயர்ந்தது. தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் கோவையில் 43 வயது பெண், 92 வயது மூதாட்டி, 60 வயது முதியவர் என 3 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,100- ஆக உயர்ந்தது. இதுதவிர நேற்று ஒரே நாளில் 378 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 536 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 4 ஆயிரத்து 108 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 99 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 94 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 ஆயிரத்து 295 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 849 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story